/* */

அதிமுக தோல்வி எதிரொலி: ஒற்றை தலைமை வருமா? கட்சியினர் எதிர்பார்ப்பு

உள்ளாட்சி தேர்தல் தோல்வி எதிரொலியாக ஒற்றை தலைமை வேண்டும் என்று அதிமுகவினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

HIGHLIGHTS

அதிமுக தோல்வி எதிரொலி: ஒற்றை தலைமை வருமா? கட்சியினர் எதிர்பார்ப்பு
X

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட மிக மோசமான தோல்வி, அக்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொண்டர்களின் மனநிலையும் இருந்து வருகிறது. இதையடுத்து, "கட்சியின் பொதுக்குழுவை கூட்டுங்கள், தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும்" என்று மாநில நிர்வாகிகள் பலரும் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அழுத்தம் கொடுக்க துவங்கி விட்டார்கள். உள்ளாட்சியில் ஏற்பட்ட தோல்வி, கட்சியின் தலைமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற விவாதத்தையும் இது உருவாக்கி வருகிறது.

மூத்த தலைவர்கள் கூட "ஒற்றை தலைமை" தான் கட்சிக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் சரியான பாதையாக அமையும் என்கிற விமர்சனத்தை துவக்கியிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வர வர... எடப்பாடி, ஓபிஎஸ் தொடங்கி மூத்த தலைவர்கள் பலரும் அப்செட்டாகி விட்டனராம். மதியம் 12 மணிக்கு மேல் மாவட்டங்களில் இருந்து வந்த போன்கால் எதையும் அட்டெண்ட் பண்ணவில்லையாம் எடப்பாடி. அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விட்டாராம்.

ஒரு கட்டத்தில் தனது பெர்சனல் போனை ஆப் செய்யும் அளவுக்கு போய்விட்டார். அந்தளவுக்கு தேர்தல் முடிவுகள் அவரை இம்சை படுத்திவிட்டது என்கிறார்கள். நேற்று இரவு 9 மணிக்குதான் தங்கமணி, வேலுமணி இருவரிடமிருந்தும் வந்த போன் கால்களை அட்டெண்ட் பண்ணியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, "நம் சமூகம் கூட நம்மை கைவிட்டு விட்டது பார்த்தீர்களா? ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் சமூகம் கூட நம் பக்கம் நிற்கும் போல!" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி.

அதனை தங்கமணி, வேலுமணி ஆமோதித்துள்ளனர். இப்போது கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி விவாதிக்க முடிவு செய்திருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. உட்கட்சி பூசலை தவிர்த்து பிரச்னைகளை கூடி விவாதிப்பதா? அல்லது கட்சியை பலப்படுத்துவதா? அல்லது சோர்வடைந்துபோன தொண்டர்களை ஊக்கப்படுத்துவதா? அல்லது திமுகவை சமாளிப்பதா? என்ற பல கட்டபிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறது அதிமுக மேலிடம்.

Updated On: 23 Feb 2022 2:02 PM GMT

Related News