அமெரிக்க மக்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறிய ரஷ்யா தூதர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா அதிபர் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக அமெரிக்க குடிமக்களிடமிருந்து ரஷ்ய தூதரகத்துக்கு மன்னிப்பு கடிதங்கள் வந்துள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷ்யா தூதர் அனடோலி அந்தோனோவ் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஏபிசி நியூஸ் நேர்காணலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஒரு கொலையாளி என்று நம்புகிறீர்களா என்று கேட்டபோது, ஆம் நானும் அதை ஏற்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.மேலும், 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதற்காக ரஷ்யா நிச்சயம் அதற்கான பதிலடியை பெரும் என்று கூறினார்.
இதற்காக ஜோ பைடன் ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென கோரியது. இந்நிலையில் சனிக்கிழமை அமெரிக்காவுக்கான ரஷ்யா தூதர் அனடோலி அந்தோனோவ் , ஏராளமான அமெரிக்கர்கள் வாஷிங்டனிலிருந்து ரஷ்யா குறித்து வந்த அவதூறான கருத்துக்களில் முரண்பாடு இருப்பதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யா மற்றும் அமேரிக்கா இடையிலான நட்புறவை வளர்ப்பதற்கு ஆதரவாக கடிதங்கள் எழுதிய அமெரிக்கர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும், அவர்களின் அக்கறையை கண்டு நெகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu