உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை அமெரிக்காவால் இதே நாளில் நடத்தப்பட்டது

உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை அமெரிக்காவால் இதே நாளில் நடத்தப்பட்டது
X

உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை

உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை அமெரிக்காவால் , 1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி டிரினிடி என்ற இடத்தில் நடத்தப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகள் தாங்கள் உருவாக்கிய அணுவாயுதங்களை சோதித்துள்ளன. இச்சோதனைகள் அணு ஆயுதங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, பல்வேறு சூழல்களில் எவ்வாறு இயங்குகின்றன, கட்டிடங்கள் ஓர் அணுகுண்டு வெடிப்பின்போது எவ்வண்ணம் பாதிப்பிற்குள்ளாகின்றன போன்ற பல தகவல்களைப் பெற உதவுகின்றன. மேலும் நாடுகள் தங்கள் அறிவியல் மற்றும் இராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் நடத்தப்படுகின்றன.

உலகின் முதல் அணுவாயுதச் சோதனை ( USA) அமெரிக்காவால் , 1945 ஆம் ஆண்டில் ஜூலை 16 அன்று டிரினிடி என்ற இடத்தில் 20 டன் எடை உள்ள அணுகுண்டு வெடிப்பின் மூலம் நடத்தப்பட்டது.


இந்த அணுகுண்டின் சோதனையின் தொடர்ச்சியாக அதன் உண்மையான பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையாகத்தான் அடுத்த மாதமே ஆகஸ்ட் 6 ம் தேதி போரில் தோற்று சரண் அடைவதாக ஜப்பான் தெரிவித்த பிறகும் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் திட்டமிட்டு அணுகுண்டு போடப்பட்டது.

முதல் ஹைட்ரஜன் குண்டு சோதனை அதே அமெரிக்காவால் மார்சல் தீவுகளில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் 1 நாள் நடத்தப்பட்டது. மிக வலிமையான அணுகுண்டு சோதனை சோவியத் ஒன்றியத்தால் 1961 ம் ஆண்டு அக்டோபர் 30, ம் தேதி அன்று 50 மெகா டன் எடை உள்ள "சார் பாம்பா" எனக் குறிப்பெயரிடப்பட்ட அணுகுண்டு சோதனையாகும்.

1996ஆம் ஆண்டு முழுமையான சோதனைத் தடை உடன்பாடு ஏற்பட்ட பின்னர், இந்நாடுகள் அனைத்து வகை அணுகுண்டுச் சோதனைகளையும் நிறுத்திவிட உறுதிமொழி அளித்துள்ளன. இந்த உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியாவும் பாக்கிஸ்தானும் 1998 ஆம் ஆண்டு தங்கள் அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.வட கொரியா 2009 ம் ஆண்டு மே 25 ம் தேதி அன்று அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது.


Tags

Next Story
ai marketing future