24 மணி நேரத்தில் 8,008 புல்அப்ஸ்களை எடுத்து உலக சாதனை
புல் அப்ஸ் எடுக்கும் ஜாக்சன் இட்டாலியானோ.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஜாக்சன் இட்டாலியானோ. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக அதிக எண்ணிக்கையிலான புல்அப்ஸ்களை எடுக்கத் திட்டமிட்டார்.
அதன்படி, 24 மணி நேரத்தில் திட்டமிட்டபடி 8,008 புல்-அப்ஸ்கள் எடுத்து முடித்தார். இதன் மூலம் டாலர் மதிப்பில் 6 ஆயிரம் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 4,80,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 7,715 புல்-அப்ஸ் எடுத்ததே இதற்கு முந்தைய உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில், இதற்கு முந்தையை உலக சாதனையையும் ஜாக்சன் முறியடித்துள்ளார்.
இதுகுறித்து, ஜாக்சன் இட்டாலியானோ தனது நிதி திரட்டல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நான் செய்யும் ஒவ்வொரு புல்அப்ஸ்க்கும் 1 டாலர் திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளேன். அனைவரது உதவியும் தேவை. என்னுடைய இந்த முயற்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் திரட்டப்படும் அனைத்து நிதியும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu