உலக அமைதி செயற்பாட்டாளர், உலகக் குடிமகன் - காரி டேவிஸ் காலமான தினமின்று
காரி டேவிஸ்
அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து, 'உலகக் குடிமகன்' என்று தன்னை அறிவித்துக்கொண்டவர்-ஐ.நா.சபைக் கூட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்த காரி டேவிஸ் நினைவு நாள்
அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து, 'உலகக் குடிமகன்' என்று தன்னை அறிவித்துக்கொண்டவர்; ஐ.நா.சபைக் கூட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தவர்; சமூக அமைதியின் பொருட்டு, உலக குடிமகன்களுக்கான சர்வதேச அரசாங்கத்தை ஏற்படுத்திய காரி டேவிஸ் (Garry Davis, 1921-2013) காலமான நாள் இன்று.
அடக்கு முறை, சிறைவாசம், ஏளனம், நகைச்சுவை இவைகளையெல்லாம் பொருட்படுத்தாத மனதுடன் , 1953 செப்டம்பர் மாதம் 'உலக அரசாங்கத்தை' ஏற்படுத்தினார் காரி டேவிஸ். இன்றும் அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ' உலக பாஸ்போர்ட்' வழங்கப்பட்டு வருகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை (நிபந்தனைக்குட்பட்டு) அங்கீகரித்துள்ளன.
நியூயார்க் நகரில் செயல்படும் இந்த அமைப்பின் "World Service Authority" பிரிவில், இதுவரை 25,00,000 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கென்று தனி சட்டங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன. அதில் இணைந்து கொள்வதற்கான விதிகளும், விண்ணப்பமும் அவர்களது தளத்தில் உள்ளன. (www.worldservice.org)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu