ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ம் நாள் உலக மலேரியாதினம் அனுசரிக்கப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ம் நாள் 'மலேரியா ஒழிப்பு தினமாக' அறிவிக்கப்பட்டு, உலகமெங்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மலேரியாவை ஒழிக்க நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்வோம். நமது சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம்.
மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். அனாபிளஸ் என்ற கொசு நம்மை கடிப்பதன் மூலம் ப்ளாஸ்மோடியா என்ற கிருமி நம்முடைய இரத்தில் சேர்வதால் மலேரியா நோய் ஏற்படுகிறது. அதன் பிறகு காய்ச்சல், தலை லேசாக சுற்றுதல், வாந்தி, சுவாசித்தலில் ஏற்படும் சிரமம், கடுங்குளிர் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த நோயின் தீவிரத்தால் மரணம் கூட ஏற்படலாம். இந்த கிருமிகள் குறிப்பா இரத்தத்தின் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. இதன் அறிகுறிகள் சில நாட்களில் நம் உடலில் ஏற்படும் மாற்றத்தால் உணரமுடியும்.
மலேரியா தடுப்புமருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஆனாலும் முழுவதுமாக குணப்படுத்தக்கூடிய தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. பெரும்பாலும் மலேரியா நோயானது திடீர் காலநிலை மாற்றத்தின் போது தான் அதிகமாக பரவுகிறது.
நோய் பரவாமல் தடுப்பதற்கு கொசுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும். கொசுக் கடித்தலை முற்றிலுமாக தடுத்தல் வேண்டும். கொசுக்களை ஒழிக்க பூச்சி மருந்தை வீட்டில் தெளியுங்கள். கொசுக்கள் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லாமல் இருப்பதன் மூலமாகவும், தேங்கி நிற்கும் தண்ணீருக்கு பக்கத்தில் நிற்காமல் இருப்பதன் மூலமாகவும் மற்றும் வீடுகளை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவது மூலமாகவும் இந்த நோய்யை கட்டுபடுத்தலாம். வீட்டுக்கு பக்கத்தில் கொசு உற்பத்தியாகும் இடங்கள் இருந்தால் அதை சுத்தப்படுத்துங்கள். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்கள் அல்லது தொட்டிகளை மூடி வையுங்கள். கொசு வலையும் பயன்படுத்தலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu