வடகொரியா அதிபர் கிம் அறிவிப்பால் போர் பதற்றத்தில் உலக நாடுகள்

வடகொரியா அதிபர் கிம் அறிவிப்பால் போர் பதற்றத்தில் உலக நாடுகள்
வடகொரயா அதிபர் கிம்.
வடகொரியா அதிபர் கிம் அறிவிப்பால் போர் பதற்றத்தில் உலக நாடுகள் உள்ளன.

தென்கொரியாவைத் தனது முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவை தனது நாட்டின் "முதன்மை எதிரி" என்று அறிவித்துள்ளார். எல்லையில் 0.001 மிமீ அத்துமீறினால் கூட போரை ஆரம்பிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

அவர் எதற்காக இப்படிச் செய்கிறார். தென்கொரியா மீது அவர் போருக்கு ரெடியாக உண்மையில் என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். தென்கொரியா, வடகொரியா இடையே பல காலமாக மோதல் இருந்தாலும் கூட கடந்த வாரம் தான் தென்கொரியாவை முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை ஏஜென்சிக்களை கலைப்பதாக அறிவித்த வடகொரியா, போரிட்டு தென்கொரியாவை ஆக்கிரமிக்கப் போவதாக எச்சரித்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட முக்கிய மாற்றமாக இது கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் இரு தரப்பிற்கும் இடையே ஆயுத மோதல் ஏற்படும் அபாயம் எழும்போது எல்லாம் அதைக் கட்டுக்குள் வைக்கப் பின்னணியில் இதுபோன்ற ஒரு பேச்சுவார்த்தை சேனல் இருந்தது. ஆனால் இப்போது அது இல்லாமல் போனது சிக்கலை அதிகரிக்கும். தென்கொரியாவை முதன்மை எதிரி என வடகொரியா சொல்வது வெறும் எச்சரிக்கை மட்டும் இல்லை.. அது எப்போது வேண்டும் என்றாலும் போராகவும் மாறலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

வடகொரியா அதிபர் கிம் தனக்குப் போரைத் தொடங்கும் எண்ணம் இல்லை என்கிறார். அதேநேரம் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டால் அதை நிச்சயம் தவிர்க்க மாட்டேன் என்றும் அவர் கூறுகிறார். வடக்கு எல்லைக் கோடு என அழைக்கப்படும் இரு நாடுகளுக்கும் இடையே நடைமுறை கடல் எல்லையை இனி வடகொரியா அங்கீகரிக்காது என அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதலை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

சிறு சிறு ராணுவ மோதல்கள் எப்போது வேண்டுமானாலும் போராக மாறலாம் என்பதே பலரது அச்சமாக இருக்கிறது. மறுபுறம் தென்கொரியாவும் சிறு தாக்குதலை நடத்தினாலும் அதற்குப் பல மடங்கு வலிமையான பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஒரு பக்கம் ரஷ்யா வடகொரியாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், மறுபுறம் அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாக இருக்கிறது. இதனால் இந்த பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலாக மட்டும் இருக்காது. அது விரிவடையும் அபாயமும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

தற்போது இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும் போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். கடந்த காலங்களில் வடகொரியா சிறு சிறு தாக்குதல்களை நடத்திய போதிலும், அப்போது தென்கொரியா பொறுமையாக இருந்தது. ஆனால், இந்த முறை தென்கொரியா பொறுத்துப் போகும் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் சர்வதேச வல்லுநர்கள்.

வடகொரியா- தென்கொரியா மோதல் என்பது அந்த பிராந்தியத்தில் மிகப் பெரிய போரையே உருவாக்கும் அபாயம் இருக்கிறது. அதிலும் வடகொரியாவிடம் இப்போது அணு ஆயுதங்களும் இருக்கும் நிலையில், அது உலக நாடுகளைப் பதற்றத்தில் தள்ளுகிறது. ஏனென்றால் இப்போது பல நாடுகளில் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், அது பூமியை மொத்தமாக அழிக்கும் அபாயம் இருக்கிறது. அதெல்லாம் சரி, இப்போது கிம் ஏன் இப்படிச் செய்கிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். அதாவது வடகொரியா பொருளாதார ரீதியாக எந்தளவுக்குப் பின்தங்கி இருக்கிறது.. தென்கொரியா எந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறது குறித்து தகவல்கள் வடகொரியா மக்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இதனால் மக்களைத் திசை திருப்பவே கிம் இப்படியெல்லாம் செய்வதாகச் சர்வதேச வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story