மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்:இறுதி போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது. இதன் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கி லாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகியவை தகுதி பெற்று இருந்தன. இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. நேற்று நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 157 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது அரை இறுதி ஆட்டம் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென்ஆப்பிரிக்கா 'டாஸ்' வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது
தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்தார். 92-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 2-வது செஞ்சுரியாகும். டேனிவியாட் 129 ரன்னும், ஷோபியா துங்லே 60 ரன்னும் எடுத்தனர். ஷப்னம் இஸ்மாயில் 3 விக்கெட்டும், மாரிஹன் காப், மசாபாத கிளாஸ் தலா 2 விக்கெட்டும் வழங்கினார்கள். 294 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடி 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் டேனி வியாட் 125 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu