இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டு எலான் மஸ்க் சீனாவிற்கு சென்றது ஏன்?

இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டு எலான் மஸ்க் சீனாவிற்கு சென்றது ஏன்?
X

எலான் மஸ்க்.

இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டு எலான் மஸ்க் சீனாவிற்கு சென்றது ஏன்? என்பது பற்றி அறிய தொடர்ந்து படிக்கலாம்.

இந்திய பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க் இப்போத திடீரென சீனா சென்றுள்ளார். இதற்கிடையே அவரது இந்த திடீர் பயணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் திடீரென சீனாவுக்குச் சென்றுள்ளார். அவரது பயணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்

டெஸ்லா நிறுவனம் டிரைவர் இல்லாமல் தானாக ஓட்டிக் கொள்ளும் செல்ஃப் டிரைவிங் கார் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், அது குறித்து ஆலோசிக்கவே அவர் சீனா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செல்ஃப் டிரைவிங் சாப்ட்ஃவேர் குறித்தும் இதற்கான தரவுகளைச் சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளுக்கு எடுத்து வர அனுமதி தர வேண்டும் என அவர் சீன உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.

எலான் மஸ்க் பெய்ஜிங்கில் சீன பிரீமியர் லீ கியாங்கைச் சந்தித்ததாகச் சீன ஊடகம் தெரிவித்தது.. அப்போது லி கியாங், "சீனாவில் டெஸ்லாவின் வளர்ச்சி என்பது அமெரிக்க- சீனா உறவின் உதாரணம்" என்று கூறி இருக்கிறார். எலான் மஸ்கின் சீன பயணம் முதலில் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பின்னர் எலான் மஸ்கே இது குறித்த படங்களைப் பகிர்ந்து தனது பயணத்தை உறுதி செய்தார்.

டெஸ்லாவின் தொழிற்சாலைகள் பெரும்பாலும் அமெரிக்காவில் தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவிற்கு வெளியே முதல் முறையாக ஷங்காயில் ஒரு தொழிற்சாலையை அமைக்க டெஸ்லா கடந்த 2018இல் சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதைத் தொடர்ந்து ஷாங்காயில் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது. டெஸ்லாவின் மிக முக்கிய மார்கெட்களில் ஒன்றாகச் சீனா இருப்பதால் அங்கு டெஸ்லா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

டெஸ்லா நிறுவனம் செல்ஃப் டிரைவிங் கார்களில் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்காவில் அவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த செல்ஃப் டிரைவிங் சாப்ட்வேர்களை டெஸ்லா கார்களில் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இருப்பினும், பல்வேறு காரணங்களால் சீனாவில் இந்த செல்ஃப் டிரைவிங் வசதி கொண்டு வரப்படவில்லை. சீனாவில் இருக்கும் டெஸ்லா உரிமையாளர்கள் இதற்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தாலும் டெஸ்லா அங்கு செல்ஃப் டிரைவிங் வசதியை அறிமுகப்படுத்தவில்லை. எனவே, இது தொடர்பாக ஆலோசிக்கவே எலான் மஸ்க் சீனா சென்றிருப்பார் என கூறப்படுகிறது. முன்னதாக சீனாவில் எப்போது செல்ஃப் டிரைவிங் வசதி கிடைக்கும் என ஒருவர் கேட்டதற்கு எலான் மஸ்க், "மிக விரைவில்" என பதிலளித்திருந்தார். எனவே, இதற்காகவே அவர் சீனாவுக்கு சென்றிருப்பார் என கூறப்படுகிறது.

மேலும், சீனாவிலும் டெஸ்லா ஓட்டுநர்களின் தரவுகளைச் சேகரித்து வருகிறது. செல்ஃப் டிரைவிங் வசதியைக் கொடுக்க இதுபோல தரவுகளைச் சேகரிப்பது ரொம்ப முக்கியம். சீனாவிலும் இந்தத் தரவுகளைச் சேகரித்தாலும் அதைச் சீனாவுக்கு வெளியே எடுத்துச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. சீனாவுக்கு ஏற்றபடி செல்ஃப் டிரைவிங் வசதியை மேம்படுத்த இந்த தரவுகள் முக்கியம் என்பதால் அதை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் எலான் மஸ்க் சீன அதிகாரிகளிடம் அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க், "சீனாவில் மின்சார வாகனங்கள் அதிகம் சந்தைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் அனைத்து கார்களும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாறும்" என்று கூறியுள்ளார். எலான் மஸ்க் கடந்த வாரம் தான் இந்தியா வர இருந்தார். இருப்பினும், டெஸ்லா நிறுவனம் தொடர்பான பணிகள் இருப்பதால் தனது பயணத்தைத் தள்ளி வைப்பதாகக் கடைசி நேரத்தில் அவர் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இப்போது சீனாவுக்கு சென்றுள்ளார்.

உலகெங்கும் மின்சார கார்கள் விற்பனை குறைந்து வருகிறது. இது டெஸ்லாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெஸ்லாவின் விற்பனையும் குறைந்துள்ளது. டெஸ்லாவுக்கு சீனா மார்கெட் முக்கியமானது என்பதால் அங்கு விற்பனையை அதிகரிப்பது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கவும் எலான் மஸ்க் அங்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது