குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்

குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்
X
உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக ஜூலை 23 சனிக்கிழமை அறிவித்தது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "உலகளாவிய குரங்கு அம்மை நோய் பரவல் சர்வதேச கவலையின் பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறது."

சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் கீழ் ஒரு அவசரக் குழுவைக் கூட்டி ஒரு மாதத்திற்குப் பிறகு, பல நாடுகளில் குரங்கு அம்மை சர்வதேச அளவில் பரவுவதை தொடர்ந்து பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

மேலும் இப்போது 16,000க்கும் மேற்பட்ட தொற்று 75 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து இறப்புகள் பதிவாகி உள்ளது என்று டெட்ரோஸ் தெரிவித்தார்

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!