பாரத நாட்டைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறோம்: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் உருக்கம்

பாரத நாட்டைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறோம்: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் உருக்கம்
X
இன்று நமது நாட்டின் பெருமையை நான் வெளிநாட்டில் தெரிந்துகொண்டேன். ஒரு பாரதியனாக இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்- இந்தியா திரும்பிய மாணவர்கள்.

உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியை இந்திய அரசு மிகவும் கவனமெடுத்து செய்து வருகிறது. கடினமான போர் சூழலிலும், பாதுகாப்பான வழிகளில் பத்திரமான மீட்கப்பட்டு பலரும் தாய் நாடான இந்தியா திரும்பி வருகின்றனர்.

அப்படி உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

உக்ரைன், டெர்னோபில்லில் இருந்து இதுவரை நாங்கள் மூன்று நாடுகளை கடந்து வந்திருக்கிறோம். இந்த மூன்று நாடுகளின் எல்லைகளிலும் எங்களது வண்டியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்தியக் கொடியை பார்த்தவுடன் வண்டியை நிறுத்த கூட சொல்லவில்லை அமைதியாக அனுப்பிவிட்டார்கள். இங்கு பார்டரில் இருக்கும் ராணுவமும் சரி சாதாரண பொதுமக்களும் சரி ஒரு இந்தியக் கொடியை பார்த்தவுடன் நமக்கு மிகவும் மரியாதை அளிக்கிறார்கள். நம்மை மிக சுலபமாக அனுப்பிவிடுகிறார்கள். இன்று நமது நாட்டின் பெருமையை நான் வெளிநாட்டில் தெரிந்துகொண்டேன். ஒரு பாரதியனாக இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன், என்று தெரிவித்தனர்.

Tags

Next Story
ai future project