ரஷியாவில் ராணுவத்திற்கு எதிராக திரும்பிய வாக்னர் கூலிப்படை

ரஷியாவில் ராணுவத்திற்கு எதிராக திரும்பிய வாக்னர் கூலிப்படை
X

வாக்னர்  தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் - கோப்புப்படம் 

ராணுவ தலைமையை கவிழ்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என வாக்னர் குழு தலைவர் கூறி உள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள ரஷியா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரஷிய படைகள் குண்டுமழை பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவும் களத்தில் இறங்கி உக்ரைன் படைகளை கடுமையாக தாக்கின. இந்த இரண்டு தரப்பினரையும் உக்ரைன் படைகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்டுள்ள புதிய ஆடியோவில் கூறியிருப்பதாவது:- நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். ராணுவ தலைமையை ஓரங்கட்டுவோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம், இறுதிவரை செல்வோம். வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும். எங்கள் படைகளை ரஷிய ராணுவம் கொடிய ஏவுகணைத் தாக்குதல்களால் குறிவைத்தது. அவர்களுக்கு பதிலடி கொடுப்போம் என கூறியுள்ளார்

பல மாதங்களாக பாதுகாப்பு அமைச்சுடன் பகையில் மூழ்கியிருந்த ப்ரிகோஜின், வெள்ளிக்கிழமை மாஸ்கோ தனது படைகளை கொடிய ஏவுகணைத் தாக்குதல்களால் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டி, பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தார்.

கடந்த ஆண்டு உக்ரைனில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிகவும் துணிச்சலான சவாலில் மாஸ்கோவின் இராணுவத் தலைமையை தண்டிக்க ரஷ்யர்களை அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் ராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்த சக்தி வாய்ந்த கூலிப்படையின் தலைவர் வாக்னரை கைது செய்ய ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக போட்டி கிரெம்ளின் முகாம்களுக்கு இடையே வளர்ந்து வரும் பகைமையின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மாஸ்கோ தலைமையை கவிழ்ப்பதாக சபதம் செய்ததை அடுத்து தலைநகர் மாஸ்கோ உட்பட பல முக்கிய ரஷ்ய நகரங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதாக மாஸ்கோ மேயர் அறிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!