அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி

விவேக் ராமசாமி (பைல் படம்).
Vivek ramaswamy tamil-அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.
குடியரசு கட்சியில் தன்னை எதிர்த்து வேட்பாளர் தேர்வில் வேறு யாரும் போட்டியிட கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருந்து கட்சி நிர்வாகத்திடம் ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே சமீபத்தில் அறிவித்தார்.
Vivek ramaswamy tamil-இந்த நிலையில் டிரம்ப்பை எதிர்த்து மற்றொருவரும் அதிபர் தேர்தலில் களம் இறங்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தொழில் அதிபரும் மிகப் பெரிய கோடீஸ்வரருமான விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்கள்.
அவரது தந்தை மின் பொறியாளராகவும், தாய் முதியோர் மனநல மருத்துவராகவும் பணிபுரிந்தனர். அமெரிக்காவின் சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமி புகழ் பெற்ற ஹார்வர்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். ஒரு தனியார் டி.வி. சேனலில் நேரடி நிகழ்ச்சியில் பேசிய விவேக் ராமசாமி, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
37 வயதான விவேக் ராமசாமி மிகப்பெரிய மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி என்று கூறப்படுகிறது. அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் தேர்தலில் போட்டியிட கட்சி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu