மியான்மருடன் அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு - அமெரிக்கா

மியான்மருடன் அனைத்து வர்த்தக உறவுகளும்  துண்டிப்பு - அமெரிக்கா
X

மியான்மருடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்திக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்தத் தடை தொடரும் என அமெரிக்க வர்த்தகப் பிரநிதியான காத்தரீன் தய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டில் அமெரிக்கா மியான்மருடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிலையில் அது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.இதேவேளை மியான்மர் மக்களின் போராட்டத்தை அமெரிக்கா ஆதரிப்பதாகவும், அமைதியை திரும்பச் செய்ய தேர்தல் மூலமாக புதிய அரசு விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!