பொருளாதார தடை விதித்த அமெரிக்கா, இங்கிலாந்து: கடுமையாக எச்சரிக்கும் ரஷ்யா

பொருளாதார தடை விதித்த அமெரிக்கா, இங்கிலாந்து: கடுமையாக எச்சரிக்கும் ரஷ்யா
X

ரஷ்யா அதிபர் புட்டின்

ரஷ்யாவின் பாதையில் யாரேனும் தலையிட்டால் வரலாறு காணாத மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் -அதிபர் புட்டின் எச்சரிக்கை.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் 2 லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்து போரை தொடங்கியது, உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளிட்ட பல முக்கிய ரஷ்யா படைகள் நகரங்களை தாக்கி வருவதோடு, உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குவதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்த செயல்பாட்டால் கோபமடைந்த அமெரிக்கா , இங்கிலாந்து நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தனர். ஆனால் இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கவலை கொள்ளவில்லை. எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் யாரேனும் தலையிட்டால் அல்லது எங்களுடையே நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story