பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!

ஜெர்மன் ஜி 7 உச்சி மாநாட்டின் நிகழ்வுக்கு இடையே பிரதமர் மோடியை பார்த்து தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர் ஜோபைடன்.
ஜெர்மனியில் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக, ஜெர்மன் வாழ் இந்தியர்களை தனியாக சந்தித்து அளாவளாவினார். ஜெர்மனி முனிச் நகரில் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு நிகழ்வில், கனடா பிரதமர் ஸ்டின் ட்ரூடேவிடம் மோடி சுவாரசியமாக பேசிகொண்டிருந்தார். அப்போது பிரதமர் மோடியை சற்று தூரத்தில் இருந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் பார்த்து விட்டார். ஆனால் எதிர்திசையை நோக்கி நின்றிருந்ததால் இதனை மோடி கவனிக்கவில்லை. இதையடுத்து அவருடன் பேசும் ஆவலில், பிரதமர் மோடியின் அருகில் தேடி வந்து ஜோபைடன் தோள்பட்டையை லேசாக தட்டினார்.
இதனால் சுதாரித்து கொண்டு சட்டென திரும்பி பார்த்த மோடி மிக நெருக்கமாக நின்று இருந்த ஜோ பைடனுக்காக ஒரு படி தானும் மேலேறி, கை குலுக்கினார். மேலும் நலம் விசாரித்து தனது மரியாதையையும் நட்பையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். இதையடுத்து, தற்போது இந்த வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி பலருக்கும் புருவம் உயர்த்தும் வகையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu