/* */

குடியரசுத் தலைவருக்கு மொரீஷியஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கல்

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

HIGHLIGHTS

குடியரசுத் தலைவருக்கு மொரீஷியஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கல்
X

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மொரீஷியஸ் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் ஆர்வமுள்ள இளைஞர்களின் கனவுகளை அடைவதற்கான ஏணிகள் மட்டுமல்ல; அவை மனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் தளங்கள். இந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகத்திலிருந்து சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டம் பெறுவது தமக்கு குறிப்பாக பெருமை அளிப்பதாக அவர் கூறினார். இது அனைத்து இளைஞர்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு, அவர்களின் தனித்துவமான ஆர்வத்தைக் கண்டறியவும், அவர்களின் கனவுகளைத் தொடரவும் ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வி சக்தியின் உருமாறும் தாக்கம் குறித்த தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, கல்வியே நம்மை பாதிப்பு மற்றும் இழப்பிலிருந்து வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்கு அழைத்துச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவை நாளைய அறிவுசார் பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்ல இளைஞர்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதை இந்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடைய புதிய தேசிய கல்விக் கொள்கை, இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்தி, மனிதகுலத்தின் நல்வாழ்வை மேம்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகளின் சக்தி மையமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்காலத்தை நோக்கிய இந்த உற்சாகமான பயணத்தில், மொரீஷியஸ் போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா ஆவலுடன் உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 400 மொரீஷியஸ் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவதையும், சுமார் 60 மொரீஷியஸ் மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வியைத் தொடர உதவித்தொகை பெறுவதையும் குறிப்பிடுவதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மொரீஷியஸை நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நேசத்துக்குரிய கூட்டாளியாகவும், ஆப்பிரிக்கா சென்றடைவதில் முக்கிய நாடாகவும் இந்தியா காண்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

இந்தியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையேயான சிறப்பான நட்புறவுக்கு மக்களிடையேயான வலுவான தொடர்புகள் அடித்தளமாக உள்ளன என்று குறிப்பிட்ட அவர், மொரீஷியஸ் மற்றும் இந்திய இளைஞர்கள் இந்த சிறப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு- மொரீஷியஸ் அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் சந்திப்பு

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தனது முதல் அரசுமுறைப் பயணமாக நேற்று 2024, மார்ச் 11 மொரீஷியஸ் சென்றடைந்தார். சர் சீவூசாகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மொரீஷியஸ் மூத்த பிரமுகர்கள் முழு அரசு மரியாதையுடன் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

அன்றைய தினத்தின் முதல் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மொரீஷியஸ் அதிபர் பிருத்விராஜ்சிங் ரூபுனை அரசு மாளிகையான லீ ரெடுயிட்டில் சந்தித்தார். தனித்தன்மை வாய்ந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-மொரீஷியஸ் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். கடந்த ஆண்டு மாநில இல்லத்தின் மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகள் தோட்டத்தையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.

பின்னர், பாம்பிளவுஸ் சேர் சீவசாகுர் ராம்கூலம் தாவரவியல் பூங்காவிற்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சேர் சீவசாகுர் ராம்கூலம் மற்றும் சேர் அனிரூத் ஜக்நாத் ஆகியோரின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாலையில் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் குடியரசுத் தலைவரை வரவேற்று அவரை கௌரவிக்கும் வகையில் விருந்து அளித்தார்.

விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், சுதந்திரம் பெற்ற குறுகிய காலத்தில், மொரீஷியஸ் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், பன்முகத்தன்மையின் அடையாளமாகவும், வளமான நாடாகவும், மதிப்புமிக்க சர்வதேச நிதி மையமாகவும், செழிப்பான சுற்றுலாத் தலமாகவும், மிக முக்கியமாக உலகின் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகளிலும் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது என்று கூறினார். "மொரீஷியஸ் அதிசயமாக" பொருளாதாரத்தை மாற்றிய தொலைநோக்கு பார்வைக் கொண்ட மொரீஷியஸ் தேச நிர்மாணிப்பாளர்கள் ஆப்பிரிக்காவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் உத்வேகம் அளிக்கின்றனர் என்று அவர் பாராட்டினார்.

மொரீஷியஸில் தங்களது சகோதர, சகோதரிகளின் வெற்றியால் இந்தியர்கள் பெருமிதம் கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார். நமது இரு அரசுகளும் ஒருவருக்கொருவர் முன்னுரிமை அளித்து, இந்த உறவில் முதலீடு செய்வதால், சமீபத்திய ஆண்டுகளில் நமது இருதரப்பு உறவுகளில் விரைவான முன்னேற்றம் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

மொரீஷியஸுக்கு ஒரு புதிய சிறப்பு ஏற்பாட்டையும் அவர் அறிவித்தார். இதன் கீழ், 7-வது தலைமுறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொரீஷியர்கள் இப்போது இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமைக்கு தகுதி பெறுவார்கள் - இது பல இளைய மொரீஷியஸ் மக்கள் தங்கள் மூதாதையர்களின் நிலத்துடன் மீண்டும் இணைக்க உதவும்.

வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், மொரீஷியஸ் போன்ற நெருங்கிய கூட்டாளிகளை நம்முடன் தொடர்ந்து இணைத்துக் கொள்வோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். "வசுதைவ குடும்பகம்" மற்றும் "சர்வஜன சுகின பவந்து" ஆகிய முக்கிய மாண்புகளைப் பின்பற்றி, உலக அமைதி மற்றும் செழிப்புக்கான ஆதாரமாக இந்தியா தொடர்ந்து இருக்கும்.

Updated On: 12 March 2024 5:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு