அமெரிக்காவில் விமான விபத்து விமானி பலி

அமெரிக்காவில் விமான விபத்து  விமானி பலி
X

அமெரிக்காவில் கொலராடோ மலைகளில் சிறிய ரக விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு கொலராடோவின் கொனிஃபருக்கு தெற்கே சுமார் 20 மைல் தொலைவில் உள்ள விக்வாம் க்ரீக் டிரெயில் அருகே விபத்து ஏற்படக்கூடும் என்று தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக ஜெபர்சன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், விமானத்தை கண்டுபிடித்த குழுவினர், ஒரே ஒரு இறப்பு இருப்பதாக அறிவித்தனர். விமானத்தின் விமானி சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக நாங்கள் அறிவிக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பிராத்தனை செய்கிறோம் என்றும் யு.எஸ். ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவை விசாரணையை மேற்பார்வையிடும் என்று ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்