இராணுவ அராஜகம் குறித்து ஐ.நா சிறப்புத் தூதுவர் எச்சரிக்கை
மியன்மார்ல் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அங்கு இரத்தம் சிந்தப்படும் நெருக்கடி குறித்து மியன்மாருக்கான ஐ.நா சிறப்புத் தூதுவர் கிறிஸ்டின் ஸ்க்ரனர் பர்கனெர், பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மியன்மார் மக்களுக்கு என்ன சரியோ அதனை செய்வது மற்றும் ஆசியாவின் மையப்பகுதியில் பேரழிவை தவிர்க்க கூட்டு நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு இருக்கின்ற அனைத்து சாதகங்கள் பற்றியும் கவனிப்பு செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இரத்தம் சிந்தப்படும் நிகழ்வுகளின் போக்கை மாற்றுவதற்கு முக்கிய நடவடிக்கைகளை இந்தச் சபை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்கெர்னர் பர்க்னர் கேட்டுக்கொண்டார்.
மியன்மாரில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் நியூயோர்க்கில் ஐ.நா கூட்டத்தை நடத்த பிரிட்டன் கோரிக்கை விடுத்திருந்தது.இராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாது. சர்வதேசம் பதில் அளிக்கும் வகையில் பாதுகாப்பு சபை பங்காற்ற வேண்டும் என்று ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதுவர் பார்பரா வூட்வேர்ட் பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu