செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: முதல் முறையாக விவாதிக்கிறது ஐ.நா

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: முதல் முறையாக விவாதிக்கிறது ஐ.நா
X

ஐநாசபைக்கான பிரிட்டிஷ் தூதர் டேம் பார்பரா உட்வார்ட், ஐநா தலைமையகத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார்

உலகளாவிய அமைதிக்கு செயற்கை நுண்ணறிவின் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா சபை முதல் கூட்டத்தை நடத்த உள்ளது

செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய சாதக அம்சங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய விளைவுகள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.

"விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார்.

செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.

"செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க பல நாடுகள் இணைந்த கூட்டு முயற்சி தேவைப்படுகிறது" என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.

நம் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு வைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் நிர்வகிப்பதற்கான ஒரு பன்முக அணுகுமுறையை இங்கிலாந்து ஊக்குவிக்க விரும்புகிறது. இது உலகளாவிய முயற்சியை எடுக்கப் போகிறது" என்று வலியுறுத்தினார்.

ஓபன்ஏஐ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, "அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்" என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், "உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாம் நடத்த வேண்டும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்" என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!