உக்ரைன் செய்த தந்திரத்தால் உறைந்து போன ரஷ்யா..! இது புதுசா இருக்கே..!!

உக்ரைன் செய்த தந்திரத்தால்  உறைந்து போன  ரஷ்யா..! இது புதுசா இருக்கே..!!
X

இபைக்கில் ஏவுகணையை கொண்டு செல்லும் உக்ரைனிய வீரர்கள்

ரஷ்ய இராணு டாங்கிகளை அழிக்க சத்தமின்றி உக்ரைன் செய்த செயல் ரஷ்யாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து, போர்ட்டபிள் ஏவுகணைகள் மூலம் ரஷ்ய விமானங்கள் மற்றும் டாங்கிகளை உக்ரைன் அழித்தது மட்டுமல்லாமல், படைகள் முன்னேறுவதையும் தடுத்து வருகிறது இப்போது, ஒரு கில்லர் மூவ் நடவடிக்கையை உக்ரைன் எடுத்துள்ளது.

உக்ரைனில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் போர்ட்டபிள் ஏவுகணையான லைட் ஆண்டி டேங்க் வெப்பன் ஏவுகணையை ஜனவரியிலேயே இங்கிலாந்து வழங்கியது. போருக்கு முன்பே சுமார் 2,000 ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன், மேலும் பல ஆயுதங்களை வழங்கியது

இவற்றை போர்முனைக்கு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் இருந்தன. ரஷ்ய டாங்குகளை அழிக்க வேறு ஏதாவது புதிய உத்தி தேவை என யோசித்த போது தான், எலெக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்தலாம் என முடிவெடுத்தனர்.

உள்ளூர் உக்ரேனிய நிறுவனமான ELEEK, போர்க்களத்தில் பயன்படுத்த சத்தமில்லாத, சக்திவாய்ந்த மின்சார பைக்குகளை ஆயுதப்படைகளுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் உக்ரேனிய வீரர்கள் நடந்து செல்வதை விட மிகவும் அமைதியாகவும் குறைந்த நேரத்திலும் போர்முனையை அடைய முடிந்தது.

இதன் மூலம் ரஷ்யாவின் முக்கியமான ராணுவ டேங்குகளை உக்ரைன் வீரர்கள் அழித்துள்ளனர்.

ஏவுகணை தாக்குதல் சேதமடைந்த ரஷ்ய ராணுவ டேங்க்

முன்பு கைகளால் ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், தற்போது மின்சார பைக்குகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பைக்குகள் NLAW ராக்கெட்டுகளை எடுத்துச் சென்று எதிரி டாங்கியை அழிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன,

எலெக்ட்ரிக் டர்ட் பைக்குகள் செயல்பாட்டு பெடல்கள் மற்றும் 200 மைல்கள் அல்லது 320 கிலோமீட்டர்களுக்கு மேல் செல்லும். ஹேண்ட் த்ரோட்டில் மூலம், ரைடர்கள் பெடல்களை தேவைக்கேற்ப ஃபுட்ரெஸ்ட்களாகப் பயன்படுத்தலாம்,.

பைக்குகள் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும். மேலும் அதன் அதிக சுமைகளை சுமக்கும் திறன் காடுகள் நிறைந்த பாதைகளில் செல்வதற்கும் அல்லது பாதைகள் இல்லாத போது சுலபமாக பயன்படுத்தவும் உதவுகிறது.

பொதுவாக ராக்கெட்டுகள் வீரர்கள் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், 12.5 கிலோ ஆயுதத்தை மின்சார பைக்கின் பின்புறத்தில் கொண்டு செல்லும்போது நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்வது மிகவும் எளிதானது.


இது ஒரு கேம்-சேஞ்சர் என்பதை நிரூபித்திருந்தாலும், சில ஆபத்துகளும் உள்ளன. இதேபோன்ற ஏவுகணையை திறந்த இடத்தில் ஏவுவது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் பெரும்பாலும் எதிரியின் முக்கிய பீரங்கி அல்லது பல கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கு அவர் இரையாக வாய்ப்புள்ளது.

இருப்பினும், அதிக ஆற்றல் கொண்ட மின்சார பைக்கைப் பயன்படுத்தி, விரைவாகவும், புத்திசாலித்தனமாகவும் போர்நிலைக்கு எடுத்து செல்வது, வீரர்களின் செயல்பாட்டை குறைத்து வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா