ஜப்பான் நில நடுக்கத்தையொட்டி வடகொரியா, ரஷியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் நில நடுக்கத்தையொட்டி வடகொரியா, ரஷியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை
X

ஜப்பானில் நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள காட்சி.

ஜப்பான் நில நடுக்கத்தையொட்டி வடகொரியா, ரஷியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ஜப்பானை தொடர்ந்து வடகொரியா, ரஷ்யாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று ஜப்பான். தீவு நாடான ஜப்பான் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய ரிங் ஆப் ஃபயர் எனப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால், அந்த நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகும். ஆனால், சில நேரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஜப்பான் மக்களை பீதியில் உறைய வைத்துவிடும். அந்த வகையில் தான் புத்தாண்டு தினமான இன்று ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானில் கட்டிடங்கள் கரடுமுரடான சாலையில் செல்லும் போது வாகனங்கள் குலுங்குவது போல குலுங்கின. இதனால், ஜப்பான் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடப்பட்டது. ஜப்பானின் இஷிகாவா, நிகாடா, டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. மக்களை உடடினாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கினர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது. 5 மீட்டர் அளவுக்கு: இதனால் ஜப்பான் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 5 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜப்பானின் அண்டை நாடான வடகொரியா மற்றும் ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை ரஷ்ய அதிபர் மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது.

உடனடியாக கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடனர். ஜப்பானை ஒட்டியுள்ள ஷாக்லின் தீவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாக ரஷ்யாவின் அவசரகால சேவைகளுக்கான அமைச்சர் கூறினார்.

Tags

Next Story
ai as the future