டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதி

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதி
X
அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நேற்று மாலை (அமெரிக்க நேரப்படி) பென்சில்வேனியாவின் பட்லரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது சுடப்பட்டார்.

அவரது உரை தொடங்கி கிட்டத்தட்ட ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, திடீரென்று துப்பாக்கிச் சூடுகளின் சத்தம் காற்றில் ஒலித்தது. குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் தனது வலது காது வழியாகச் புல்லட் சென்றது. இதனைத் தொடர்ந்து அவரது கையில் இரத்தத்தைப் பார்த்துவிட்டு மேடைக்குப் பின்னால் தரையில் விழுந்தார். உடனடியாக பாதுகாப்புப் படையினர் மேடையில் விழுந்த டிர்ப்பை சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவே, பாதுகாப்புப் படையினர் டிரம்பை 25 வினாடிகள் தரையில் வைத்திருந்தனர். பின்னர் ரத்தம் சொட்டச் சொட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

உடனடியாக எதிரே உள்ள கட்டிடத்தின் உச்சியில் இருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து கூட்டத்தில் இருந்த டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "நான்கு ஷாட்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன், கூட்டம் குறைவதை நான் கண்டேன், பின்னர் டிரம்ப் மிகவும் விரைவாக வெளியேறினார். பின்னர் இரகசியப் பிரிவினர் அனைவரும் குதித்து தங்களால் இயன்றவரை அவரைப் பாதுகாத்தனர். ஒரு நொடியில் அவர்கள் அனைவரும் அவரைப் பாதுகாக்கிறார்கள். " கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றும், ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிபர் பைடனின் அனைத்து பிரசாரக் கூட்டங்களும் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்