தேர்தல் மோசடி தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைது
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை ஜார்ஜியா சிறையில் மோசடி மற்றும் சதி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொன்ல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் நடந்து வருகின்றன.
குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. அதேசமயம் வருகிற 25-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜார்ஜியா தேர்தல் வழக்கு தொடர்பாக அட்லாண்டா சிறையில் முன்னாள் அதிபர் டொன்ல்டு டிரம்ப் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த நிலையில், சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். ட்ரம்பிற்கு ஃபுல்டன் கவுண்டி சிறைச்சாலையில் கைதி எண் "PO1135809" வழங்கப்பட்டது, அதில் அவரது உயரம் ஆறு அடி மூன்று அங்குலங்கள் (1.9 மீட்டர்), அவரது எடை 215 பவுண்டுகள் (97 கிலோகிராம்கள்) மற்றும் அவரது முடி நிறம் "ப்ளாண்ட் அல்லது ஸ்ட்ராபெர்ரி" என பட்டியலிடப்பட்டது.
இதனால் சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 2024 குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான முன்னோடியான டிரம்ப் "அமெரிக்காவிற்கு இது மிகவும் சோகமான நாள், இங்கு நடந்திருப்பது நீதியின் கேலிக்கூத்து. நான் எந்த தவறும் செய்யவில்லை. என்று கூறினார்
2024 குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது எட்டு போட்டியாளர்களைக் கொண்ட விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தை டிரம்ப் நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர்கள் அனைவரும் வாக்கெடுப்பில் அவரை விட மிகவும் பின்தங்கியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu