பகுத்தறிவு சிந்தனையாளர் இங்கர்சால் நினைவு தினம் இன்று
சிந்தனையாளர் இங்கர்சால்
பகுத்தறிவு சிந்தனையாளர் இங்கர்சால் நினைவு தினம் இன்று.
இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர் , இவரது தந்தை ஒரு கிறித்தவ சபை போதகராவார். தமது தந்தையின் ஐந்து குழந்தைகளில் இவர் இளையவர். சிறுவயதிலிருந்தே கூரிய சிந்தனைத்திறன் பெற்றவராக திகழ்ந்தார். உயர்கல்விக்குப் பின் சட்டப்படிப்பை பயின்றார். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது படைத்தளபதியாக பணியாற்றினார். போர் முடிந்ததும் அரசியலில் நுழைந்தார்.
மானுட அன்பே உலகிலேயே தலைசிறந்த நெறி என்றார். இறைநம்பிக்கை, போதனை, செபம் இவற்றைவிட மனிதர்களை அன்பு செய்வதே உயர்ந்தது என வாதிட்டார். கடவுளை அன்பு செய்வதைவிட மனிதனை அன்பு செய்வதே முக்கியம் என்றார். மனித குலத்தின் மகிழ்ச்சியே நமது நோக்கம்.
அதனை நாம் வாழும் இக்காலத்திலேயே முழுமையாக அடைந்துவிட முடியாது, ஆனால் நமது உழைப்பினால் அம்மகிழ்ச்சியை ஓரளவிற்கேனும் மனிதகுலத்திற்கு தரமுடியும் என்று வாதிட்ட இங்கர்சால் அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்தார். அவர் 1899ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu