உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை உருவாக்கி உள்ளன. அந்தவகையில் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு 'கோவாக்ஸ்' என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை பெற்று ஏழை நாடுகளுக்கு அளித்து வருகிறது.கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறுகையில்,உலக அளவில் நிர்வகிக்கப்படும் 700 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக பணக்கார நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பணக்கார நாடுகளில் நான்கு பேரில் ஒருவர் தடுப்பூசியை குறைந்தபட்சம் ஒரு டோசை பெற்றுள்ளார். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500 பேரில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பூசி கிடைத்துள்ளது.கோவாக்ஸ் திட்டத்தில் இதுவரை உலக அளவில் சுமார் 38 மில்லியன் மருந்து வழங்கப்பட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 0.25 சதவீதத்தை ஈடுசெய்யுதெனவும் அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture