கருங்கடல் பகுதிக்கு போர்க்கப்பலை அனுப்ப அமெரிக்கா திட்டம்

கருங்கடல் பகுதிக்கு போர்க்கப்பலை அனுப்ப அமெரிக்கா திட்டம்
X

அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை விரைவில் கருங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வழக்கமாக கருங்கடலில் பயிற்சி மேற்கொள்கிறது.ஆனால் இப்போது போர்க்கப்பல்களை அனுப்புவதன்மூலம், ரஷியாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிப்பதையே காட்டுகிறது.

உக்ரைன் எல்லை அருகே ரஷிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரஷிய எல்லையில் உக்ரைன் படைகளை குவித்து வருகிறது. இதை காரணம் காட்டி ரஷியாவும் தன் பங்கிற்கு படைகளை குவித்து வருகிறது. எல்லையில் ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ பயிற்சி பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், ரஷிய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவில் துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச வான்வெளியில் உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

Tags

Next Story
how to bring ai in agriculture