பிரதமர் மோடியை ஆரத்தழுவி ஐக்கிய அரபு அமீரக அதிபர் வரவேற்பு

பிரதமர் மோடியை ஆரத்தழுவி ஐக்கிய அரபு அமீரக அதிபர் வரவேற்பு
X
பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற ஐக்கிய அரபு அமீரக அதிபர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நயான் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார்.

ஜெர்மனியில் ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை முடித்து கொண்டு அங்கிருந்து பிரதமர் மோடி விமானத்தில் கிளம்பினார். வழியில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்க அபுதாபி சென்றடைந்தார். இதையடுத்து, விமான நிலையத்தில் மோடியை, ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் நேரில் வந்து கட்டியணைத்து வரவேற்று அழைத்து சென்றார்.

அப்போது, இதற்கு முன்னர், அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு மோடி, தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். இரு தரப்பு நாடுகளின் உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags

Next Story