சுவிஸ் தேசிய தினம் இன்று - சுவிஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட நாள்

சுவிஸ் தேசிய தினம் இன்று - சுவிஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட நாள்
X

சுவிஸ் கூட்டமைப்பு 

ஸ்விட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும்.

சுவிஸ் தேசிய தினம் இன்று - சுவிஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட நாள்

ஸ்விட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். இதன் வடக்கே ஜெர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் சுவிசின் எல்லைகளாக உள்ளன. சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.

41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 7.7 மில்லியன் மக்கள் தொகை (2009) கொண்ட நாடு. இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் 136 ம் இடத்தில் உள்ளதுடன் அந்நாட்டின் நீர்ப்பரப்பு நிலப்பரப்புடன் ஒப்பிடும் பொழுது 4.2% மாகவும் உள்ளது.

சுவிட்சர்லாந்து மண்டலங்கள் என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும். கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பெர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இதன் இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன. சுவிட்சர்லாந்து, ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது, இதன் சராசரி தனிநபர் GDP இன் மதிப்பு $67,384 ஆகும். உலகின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ள நகரங்களில் சூரிச் மற்றும் ஜெனீவா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

சுவிட்சர்லாந்து நீண்ட நடுநிலைத்தன்மையுடைய வரலாற்றினைக் கொண்டது. 1815 இலிருந்து இது சர்வதேச அளவில் எந்த போரிலும் பங்குபெறவில்லை. மேலும் உலக செஞ்சிலுவைச் சங்கம், உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐநாவின் இரண்டு ஐரோப்பிய அலுவலகங்களில் ஒன்று உட்படப் பல பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

ஐநா காரியாலயம் அந்நாட்டில் இருந்தபோதிலும் 2002ம் ஆண்டுவரை இதில் இணைந்திராத போதிலும் நார்ஷனல் லீக்கின் (தேசிய நல்லிணக்கசபை) உறுப்பு நாடக ஆரம்பத்திலிருந்தும் வந்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக 1990இல் ஸ்விட்சர்லாந்தில் நடாத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பு தோல்வியுற்றதால் அதில் இணையும் அந்தஸ்து இல்லாத நாடாகவும் உள்ளது. ஆனால் ஸ்சேன்ஜென் ஒப்பந்தத்தில் இது அங்கம் வகிக்கிறது.

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. பலமொழிகள் பேசப்படும் நாடு. செர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு முதலிய நான்கு தேசிய மொழிகள் கொண்டது. சுவிட்சர்லாந்தின் மரபுசார்ந்த பெயர் ஜெர்மனில் Schweizerische, பிரெஞ்சில் Confédération suisse, இத்தாலியத்தில் Confederazione Svizzera மற்றும் உரோமாஞ்சில் Confederaziun svizra என்பதாகும். மரபு ரீதியாக 1291 ஆகஸ்ட் 1 ம் தேதி சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டது. சுவிஸ் தேசிய தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்படுகிறது.


இந்நாடு 1291 ஆகஸ்ட் 1 ம் தேதி விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இன்று வரை சுவிட்சர்லாந்து ஆகஸ்ட் 1 ம் தேதியினை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது. 1291 ம் ஆண்டு சுதந்திரமடைந்த சுவிஸ் 1499 செப்டம்பர் 22 ம் தேதி அங்கீகாரமற்ற கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648 அக்டோபர் 24 ம் தேதி அங்கீகரிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து 1848 செப்டம்பர் 12 ம் தேதியில் இருந்து இன்றைய காலம் வரையுள்ள நடைமுறைக்கு வந்த சமஷ்டி கட்டமைப்பின் இடையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1291 இல் விடுதலை அடைந்த போதிலும் இன்றைய மத்திய ஸ்விட்சர்லாந்து நிலப்பகுதியை மட்டுமே நிலப்பரப்பாக கொண்டிருந்தது. பின்பு நாளடைவில் நில அபகரிப்பு காலம் காலமாக நடத்தப்பட்டு 1848 இல் எல்லைகள் வரையப்பட்ட பரந்த நவீன ஸ்விட்சர்லாந்து தோன்றியது.

Tags

Next Story