ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு விலங்குகளை மனிதர்கள் சாப்பிடுகிறார்களா?
உலகம் முழுவதும் பெரும்பாலான உணவு பிரியர்களின் முதல் தேர்வு இறைச்சியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியை அதிக அளவில் சாப்பிடுகின்றனர். பண்டிகை காலங்களில் இறைச்சி விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் சாப்பிடும் விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரம் தலையை சுற்ற வைக்கிறது.
இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் காட்டப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் மனிதர்கள் 100 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகளை உட்கொள்கின்றனர்.
வைரல் வீடியோவில் உள்ள புள்ளிவிவரத்தில் கோழிகள் முதலிடத்தில் உள்ளன. ஆண்டுக்கு 75 பில்லியன் (7500 கோடி) அளவுக்கு கோழிகள் இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. தினசரி எண்ணிக்கையை பார்த்தால் 205 மில்லியன் கோழிகள். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் ஒவ்வொரு நிமிடமும் 1,40,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.
இரண்டாவது இடத்தில் மத்தி மீன்கள் உள்ளன. ஆண்டுக்கு 14 பில்லியன் அளவுக்கு இந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடுகின்றனர். அதற்கு அடுத்த இடங்களில் இறால் (3 பில்லியன்), வாத்து (2.9 பில்லியன்), கூஸ் வாத்து (2.1 பில்லியன்) ஆகியவை உள்ளன. ஆண்டுக்கு 1.5 பில்லியன் பன்றிகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. பன்றிகள் வெட்டப்படுவது 50 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
தி எகனாமிஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்ட பழைய அறிக்கையின்படி, கோழிகள் (19 பில்லியன்), பசுக்கள் (1.5 பில்லியன்), செம்மறி ஆடுகள் (1 பில்லியன்) மற்றும் பன்றிகள் (1 பில்லியன்) போன்ற பண்ணை விலங்குகள் உள்ளன. இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த மனிதர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம். இருந்தாலும், மனிதர்கள் உண்ணும் விலங்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu