ஏமன் தலைநகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்: 78 பேர் உயிரிழப்பு

ஏமன் தலைநகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்: 78 பேர் உயிரிழப்பு
X

ஏமன் தலைநகரில் கூட்ட நெரிசல் எற்பட்ட இடம்

இஸ்லாமிய புனித மாதமான ரமலான் இந்த வார இறுதியில் முடிவடைவதைக் குறிக்கும் ஈத் அல்-பித்ர் என்ற இஸ்லாமிய விடுமுறைக்கு முன்னதாக இந்த சோகம் ஏற்பட்டது.

ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது.

மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில், ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி இருந்தது. நிதியுதவியை பெற மக்கள் கூட்டம் பெருகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 78 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

இஸ்லாமிய புனித மாதமான ரமலான் இந்த வார இறுதியில் முடிவடைவதைக் குறிக்கும் ஈத் அல்-பித்ர் என்ற இஸ்லாமிய விடுமுறைக்கு முன்னதாக இந்த சோகம் ஏற்பட்டது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆயுதம் ஏந்திய ஹூதிகள் காற்றில் சுட்டதாகவும், மின்சார வயரைத் தாக்கி அது வெடித்ததாகவும் கூறினார்கள். அகுண்டு ச்சமடைந்த மக்கள் தப்பிக்க நாலாபுறமும் ஓடியுள்ளனர் என கூறியுள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்காமல் நிதியை "சீரற்ற விநியோகம்" செய்ததாக அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture