சற்றே ஆறுதல்.. உக்ரைனுடன் பேச்சு வார்த்தை- ரஷியா திடீர் அறிவிப்பு
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கை மட்டுமல்ல ஐ.நா. பொதுச் சபையின் வேண்டுகோளையும் நிராகரித்த ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 23ஆம் தேதி போரைத் தொடங்கியது. 4 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போரில் ரஷ்ய படை வீரர்கள் வான்வெளி கடல்வழி வழியாக டாங்கி படைகள் மூலம் உக்கிரமாக தாக்கியது. அந்நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்களது வசப்படுத்தி விட்டார்கள்.
உக்ரைனில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் வெளியேறி வருகின்றனர் .அந்நாட்டு மக்கள் தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பான இடத்தைத் தேடி அலைகிறார்கள். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் ரஷ்ய அதிபர் புதின் தனது போர் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளவில்லை. அதேநேரத்தில் அமெரிக்கா ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த வெறித்தனமான போர் நடவடிக்கையில் உலக நாடுகள் நேரடியாக இறங்க முடியவில்லை என்றாலும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விஞ்ஞான உலகத்திலும் கற்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் அதிபர் புதின் சர்வாதிகாரி ஹிட்லர் போல் செயல்படுகிறார் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என தங்களது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்கள் .ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத புதின் போரை தீவிரப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக உலக நாடுகளில் குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு இந்தப் போரினால் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக மக்கள் சற்று ஆறுதல் அடையும் வகையில் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என ஒரு அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் இன்று திடீரென வெளியிட்டுள்ளார். பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த திடீர் அறிவிப்பை மதித்து பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளுமா? அல்லது முன்வைத்த காலை பின் வைப்பதில்லை அழிந்தாலும் பரவாயில்லை போரிட்டு மடிவதே தங்கள் லட்சியம் என உறுதியாக இருக்குமா என தெரியவில்லை.
இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன் பெலாரஸ் நகரில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என உக்ரைன் அதிபர்லென்ஸ்கி அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu