இந்த ஆண்டு சூரிய கிரகணம் எப்போது தெரியுமா?

இந்த ஆண்டு சூரிய கிரகணம் எப்போது தெரியுமா?
X
இந்த ஆண்டு சூரிய கிரகணம் நிகழும் தேதி (ஜூன் 10 2021)(வருடாந்திர முழு சூரிய கிரகணம்) டிசம்பர் 04 (முழு சூரிய கிரகணம்)

இந்த ஆண்டு சூரிய கிரகணம் நிகழும் தேதி (ஜூன் 10 2021)(வருடாந்திர முழு சூரிய கிரகணம்) டிசம்பர் 04 (முழு சூரிய கிரகணம்)

சந்திரன் அல்லது சூரியன் போன்ற கிரகங்கள் மற்றொரு கிரகத்தின் நிழலுக்கு நகரும் போது ஒரு கிரகணம் நிகழ்கிறது. பூமியில் மட்டும் இரண்டு வகையான கிரகணங்களை சந்திக்க முடியும். அவை சூரிய கிரகணங்கள் மற்றும் சந்திர கிரகணங்கள்.

2021 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2021 ஜூன் 10ம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம் காலை 8:12:20 மணிக்கு தொடங்கு பகல் 1.42 மணி வரை என ஐந்தரை மணி நேரம் நீடிக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும்.

ரஷ்யாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து மற்றும் வடக்கு கனடாவின் பகுதிகள். மேலும், வட ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஒரு சில பகுதி கிரகணத்தைக் காண இயலும்.இருப்பினும், ஐரோப்பாவின் பகுதிகளிலும், ஆசியாவின் பகுதிகளிலும், வடக்கு / மேற்கு ஆபிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும் பகுதிகளிலும், அட்லாண்டிக், ஆர்க்டிக் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் இந்த கிரகணத்தைக் காண இயலும்.

சூரியன் - சந்திரன் - பூமி ஒரே நேர் கோட்டில் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கு இடையே சந்திரன் வரும் போது, சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படக்கூடிய நிகழ்வாகும். பாரம்பரிய சாஸ்திர நம்பிக்கையின் படி சூரிய கிரகணம் ஒரு வானியல் நிகழ்வு மட்டுமல்ல அதன் பின் சில புராண காதைகள் கூறப்படுகிறன.

அமிர்தத்தைக் குடிக்க விரும்பிய அசுரர்களில் ஒருவன் தேவர்களைப் போல உருமாறி தேவர்களின் கூட்டத்தில் வந்து அமர்ந்தான். அவன் அமிர்தத்தை குடிக்கும் போது சூரியன் மற்றும் சந்திரன் அடையாளம் கண்டு கொண்டு மகாவிஷ்ணுவிடம் கூறினர்.

இதனால் கோபமடைந்த மகாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அந்த அரக்கனைக் கொன்றான். தலையும் உடலும் துண்டிக்கப்பட்ட நிலையில் பாம்பின் தலை அசுரனின் உடல் ராகுவாகவும், அசுர தலை, பாம்பின் உடல் கொண்டதற்குக் கேது எனவும் பெயர் வந்தது. சூரிய சந்திரன் மீது கோபமடைந்த இந்த ராகு, கேது அவர்களை விழுங்க முயற்சி செய்யும் நிகழ்வு தான் கிரகணம் என குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன் மற்றும் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.

பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும்.உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்க செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது.

கிரகணத்தின் போது சூரியனிலிருந்து வரும் கதிர்கள் தடுக்கப்படுவதால், வானத்திலிருந்து வரும் தீய கதிர்வீச்சுகள் நம்மை தாக்கும். அதனால் கிரகணத்தின் போது நம்மை காத்துக் கொள்ள சொல்கின்றனர். அதனால் நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தீய கதிர்களால் கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்றும், சமைத்த உணவுகள் மூடி வைக்க வேண்டும் என கூறப்பட்டது.

கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது வெளியே வந்தால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் வெளியே வரக்கூடாது என கூறப்படுகிறது.கிரகணத்தின் போது பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் இடத்தில் சொரிந்து கொண்டால், குழந்தைக்கு அந்த இடத்தில் மச்சம் போன்று கருமை நிறத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெரியோர் கூறுகின்றனர். கிரகணத்தை வெறும் கண்ணில் பார்ப்பது தவிர்க்க வேண்டும்.கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் உணவு அருந்த வேண்டும்.

தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் சொன்னனர் நம் முன்னோர்கள்.

மந்திர சாஸ்திராத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும்.

அதுவே கிரகண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்குமாம்.அதனால் இயல்பாக செய்யும் வேலையை விடுத்து, முழுவதுமாக இறைவனை சரணாகதி அடைவது நல்லது.

கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, குளித்து, தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதோடு, கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

கிரகணம் முடிந்த பின்னர் கடலிலோ அல்லது கல் உப்பு சிறிது போட்ட அந்த தண்ணீரில் குளித்தல் நல்லது. அப்படி செய்தால் கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் உடலில் இருந்து அகலும்.


சூரிய கிரகணம் 2021: டிசம்பர் 4 (முழு சூரிய கிரகணம்)

இந்த கிரகணம் ஒரு இடத்தில் தொடங்கி மற்றொரு இடத்தில் முடிகிறது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும். அதுவும் இது காலை 10:59 மணிக்கு தொடங்கி மாலை 03:07 மணிக்கு முடிவடையும். 2021 ஆம் ஆண்டின் கடைசி கிரகணமானது இது ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவின் தெற்கு பகுதி, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!