கடையை கொள்ளையடிக்க முயன்ற திருடன்.. துவம்சம் செய்யும் வீடியோ வைரல்

கடையை கொள்ளையடிக்க முயன்ற திருடன்.. துவம்சம் செய்யும் வீடியோ வைரல்
X

திருடனை துவம்சம் செய்யும் சீக்கியர்.

Sikh Man Thrashes Robber -அமெரிக்காவில் கடையை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை சீக்கியர் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் கடையை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை சீக்கியர் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கடைகளில் திருட்டு மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கொள்ளை சம்பவங்கள் கடை உரிமையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இத்தகைய தாக்குதல்களின் இலக்காக மாறுவதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. எனினும் இவைகள் நடக்காமல் இருக்க கொள்ளையனை தாக்கும் அளவிற்கு திரும்பியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள 7-லெவன் கடையில் ஒரு கொள்ளையன் ஒருவன் கடைக்குள் நுழைந்தபோது, சீக்கியர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோ, முகமூடி அணிந்த நபர் ஒருவர் முடிந்தவரை பல பொருட்களை பெரிய குப்பைத் தொட்டியில் கொட்ட முயல்வதைக் காட்டுகிறது. திருடன் கடை உரிமையாளரை கண்ணுக்கு தெரியாத ஆயுதத்தைக் கொண்டு பல முறை மிரட்டியுள்ளார்.

உடனடியாக கடையின் ஊழியர் ஒருவர் கொள்ளையனை தனது கைகளால் பிடித்துள்ளார். அதன் பிறகு சீக்கியர் திருடனை துடைப்பம் கொண்டு பலமுறை தாக்குகிறார். திருடன் வலியால் அலற, ஆனால், சீக்கியர் அவரைத் தொடர்ந்து அடித்து வருகிறார். அப்போது ஊழியர் அவரை கீழே இழுப்பதையும் காண முடிந்தது.

இந்த தைரியமான செயலையும் சீக்கியரின் துணிச்சலையும் பலர் பாராட்டி வருகின்றனர். மேலும் வைரலான வீடியோவைப் பார்ப்பதற்கு திருப்திகரமாக உள்ளதாகவும், நான் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றாலும், இது சிறந்த வீடியோ என தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த மற்றொருவர், "அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்தாதபோது அல்லது முடியாது, சில குடிமக்கள் தங்களுக்கு போதுமானது என்று முடிவு செய்தால் இதுதான் நடக்கும்." என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வைரலான வீடியோ: https://twitter.com/i/status/1686713571994959872

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!