எல்லா பக்கங்களில் இருந்தும் உக்ரைனை தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது ரஷ்யா

எல்லா பக்கங்களில் இருந்தும் உக்ரைனை தாக்க  ராணுவத்துக்கு உத்தரவிட்டது ரஷ்யா
X

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனை பெலாரஸில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைத்தது. உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் பெலாரஸில், பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதால் வேறு இடத்தில பேச்சு வார்த்தைக்கு தயார் எனக் கூறினார் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி.

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாது. இதையடுத்து போர் நிறுத்த பேச்சுவார்த்தையை புறக்கணித்ததாக கூறும் ரஷ்யாவின் கருத்துக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த புதின் நேற்று உத்தரவிட்டார். எல்லா பக்கங்களில் இருந்தும் உக்ரைனை தாக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை, "பெலாரசில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை காரணமாக தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புதின் வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தரவிட்டார். ஆனால் பேச்சுவார்த்தையை உக்ரைன் புறக்கணித்ததை அடுத்து சனிக்கிழமை மாலை மீண்டும் ரஷ்ய படைகள் முன்னேறி செல்ல உத்தரவிட்டது. எல்லா பக்கங்களில் இருந்தும் உக்ரைனை தாக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

Tags

Next Story