உளவு விமானத்தை துரத்தியடித்த ரஷ்யா போர் விமானம்

உளவு விமானத்தை துரத்தியடித்த ரஷ்யா போர் விமானம்
X

ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி,ரஷ்ய எல்லையை நோக்கி வந்த விமானத்தை அடையாளம் காணவும், எல்லை மீறுவதை தவிர்க்கவும் கிழக்கு இராணுவ மாவட்டத்தின் விமான பாதுகாப்பு படைகளிலிருந்து MiG-31 புறப்பட்டது.

/விமானம் அமெரிக்காவின் RC-135 உளவு விமானம் என அடையாளம் கண்ட ரஷ்யாவின் MiG-31 விமானக் குழு, அதை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தது.அமெரிக்க விமானத்தை எல்லையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ரஷ்ய விமானம் விமான தளத்திற்கு திரும்பியது.

ரஷ்ய விமானம் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிகளின் படி செயல்பட்டது.நாட்டு எல்லை மீறல்கள் தவிர்க்கப்பட்டன என ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!