நாங்களெல்லாம் வேற லெவல்: அசத்தும் ரஷ்ய படக் குழு

நாங்களெல்லாம் வேற லெவல்:  அசத்தும் ரஷ்ய படக் குழு
X

படப்பிடிப்புக்கு விண்வெளிக்கு பயணமாகியுள்ள ரஷ்ய நடிகர்கள்

விண்வெளியில் திரைப்படம் எடுப்பதற்காக கேமிராமேனுடன் நடிகையை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது ரஷ்யா

ஹாலிவுட் திரைப்படங்கள் பெரும்பாலும் விண்வெளியில் நடப்பதாகக் காட்டும் காட்சிகள் அத்தனையும் டிஸ்னி ஸ்டுடியோவில் க்ரீன் மேட் பின்னணியில் எடுக்கப்பட்டதாகத்தான் இருக்கும். ஆனால் ஹாலிவுட்டுக்கே தற்போது சவால் விடும் வகையில் ரஷ்யா விண்வெளிக்கே சென்று திரைப்படம் எடுத்துவருகிறது. திரைப்படத்தின் பெயருமே 'The Challenge'. இதன்மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுக்கும் முதல் நாடு என்கிற பெருமையை ரஷ்யா பெறுகிறது. இதற்காகத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை தற்போது கேமிராமேனுடன் விண்வெளிக்குப் பயணமாகியுள்ளார்.

விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளிக்குச் செல்லும் பெண் மருத்துவரின் கதைதான் இந்தப் படம். ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் செவ்வாய் அன்று ஒரு நடிகர், ஒரு படக்குழு உறுப்பினர் மற்றும் காஸ்மோனட் அடங்கிய ஒரு குழுவை இதற்காக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்த தகவலை நாசா விண்வெளி ஆய்வு மையமும் பகிர்ந்துள்ளது.

கஜகஸ்தானில் உள்ள பைக்கானர் விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது. நடிகர் யூலியா, காஸ்மோனாட் ஆண்டன் ஸ்காப்லெராவ் அடங்கிய கலம் விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. விண்வெளியில் 12 நாட்கள் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் விண்வெளியில் தங்குவதற்காக சிறப்புப் பயிற்சிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்தான் விண்வெளியில் முதன்முதலில் திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஷ்யக் குழு தற்போது திரைப்படத்தை இயக்கி வருகிறது. டாம் க்ரூஸ் தனது மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தை விண்வெளியில் இயக்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!