கட்டாய முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டில் தளர்வு
இஸ்ரேலில் கட்டாய முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டில் நேற்று தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் 9.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 53 வீதத்தினர் இரு முறை தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்ட நிலையில் அங்கு நோய்த்தொற்று சம்பவங்களில் வேகமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு முன் அமுல்படுத்தப்பட்ட வெளிப்புறப் பிரதேசங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும் பொது வெளியில் தொடர்ந்து முகக்கவசம் அவசியம் என்றும் மக்கள் முகக்கவசத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் பள்ளிக்கூடங்கள் மற்றும் உயர் கல்லூரிகள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் வீடுகளில் இருந்த அல்லது அவ்வப்போது கல்வி நிலையங்கள் சென்ற மாணவர்கள் பொருந்தொற்றுக்கு முன்னரான அட்டவணைக்கு நேற்று பள்ளிக்கூடம் திரும்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu