கிடாரங்கொண்டானில் நடந்தது - அமெரிக்கா டூ திருவாரூர்- ஒரு க்ரைம் ஸ்டோரி.
தமிழகத்தில் நடந்த விபத்து திட்டமிட்ட கொலையான கதை.
இன்னிக்கும் காமெடிக்காக மட்டுமே பலரால் விரும்பப்படும் ஆக்டர் சந்தானம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி திருவாரூர் எஸ்.பி.க்கு போன் செஞ்சார்.. அந்த எஸ்.பி.கிட்டே ' சார் வண்க்கம்.. ஒரு உதவி கேட்டுதான் போன் பண்றேன்.. நம்ம ரிலேட்டிவ் பொண்ணு ஒரு ஆக்சிடெண்டுலே இறந்துட்டா.. இப்ப அவளோட பிரதர் இது கொலை-தான்னு சொல்லி சில ஆதாரமெல்லாம் திரட்டி என்கிட்டே கொண்டாந்து சொல்லி அழுதாப்டி..
அதை உங்ககிட்டே நேரில் போய் காண்பிச்சு சொல்ல இருக்கேன்.. கொஞ்சம் எனக்காக நேரம் ஒதுக்கிப் பார்க்க முடியுமா?' அப்படீன்னு கேட்டார். எஸ்.பி. 'உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க' என்றதை அடுத்து நேரில் போய் பார்த்த சந்தானத்தின் ரிலேட்டிவ்-விடம் விசாரிச்ச போது கிடைச்ச ரிப்போர்ட் இது தான்...
ஜெயபாரதி. இவர் திருவாரூர் பக்கத்துலே இருக்கும் கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர். 2005 இல் இவருக்கும் அமெரிக்காவில் வேலை பார்த்த விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் மேரேஜ் நடந்துச்சு. திருமணத்திற்கு பின்னர் ஜெயபாரதி கணவரோட அமெரிக்காவில் வசிச்சு ஒரு பெண் குழந்தை பெத்துகிட்டார்
அப்புறம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்று வருசங்களுக்கு முன்னாடி ஜெயபாரதி தன் ஹஸ்பண்டோட ன் சண்டை போட்டுட்டு திருவாரூரில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துட்டார்.
இங்கே வந்த ஜெயபாரதி சொந்த ஊரிலேயே தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை செய்து வந்துள்ளார்.இப்படி போய் கிட்டிருந்த நிலையில் ஜெயபாரதி வேலை பார்த்துட்டு வீடு திரும்பிறச்சே ஒரு ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வாகனம் மோதி உடல் நசுங்கி உயிரிழந்துட்டதா சொன்னாங்க.. ஆனா இது திட்டமிட்ட கொலை சார்.. என்று அழுதபடியே சொல்லிக் கொண்டு காட்டிய ஆதாரங்களை கண்டறிந்த எஸ்.பி .உடனடியா மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
இப்போ அந்த வழக்கு விபத்து அல்ல திட்டமிடப்பட்ட கொலைச் சம்பவம்-தான் அப்ப்டீன்னு தெரிய வந்திருக்கு
இது குறிச்சு போலீஸ் தரப்பில் இருந்து வந்த சேதி இதோ ...
கொல்லப்பட்ட ஜெயபாரதி , கணவர் விஷ்ணு பிரகாசை பிரிந்து வாழ்ந்து வந்தார். அமெரிக்காவில் வசிக்கின்ற அவரது கணவர் விஷ்ணுபிரகாசுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் விஷ்ணுபிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது மனைவி ஜெயபாரதியை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். இதை தொடர்ந்து தனது உறவினர்களான ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார்.
அதன்படி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால் விபத்து என்று வழக்கை முடித்து விடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி பவித்திரமாணிக்கத்தை சேர்ந்த செந்தில் குமார் பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். வாகனத்திற்கு டிரைவராக பிரசன்னா என்பவர் இருந்துள்ளார்.
இந்த வாகனம் ஒரு நாள் முழுவதும் ஜெயபாரதியைத் பின் தொடர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. பின்னர் அவர் எப்போது, எந்த வழியாக வருவார் என எதிர்பார்த்து மோதினால் விபத்து என்று எல்லோரும் நம்பும் படியாக இருக்கும் இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
அதன்படி பணிமுடிந்து மொபட்டில் வீடு திரும்பிய ஜெயபாரதி மீது வாகனத்தை மோதியதோடு நிற்காமல் எதிரில் நின்ற பனைமரத்துடன் அவர் உடல் நசுங்கும் அளவுக்கு கொடூரமாக வாகனத்தை இயக்கி உள்ளனர். அதன் பின்னர் ஜெயபாரதியின் சடலத்தை அங்கிருந்து எடுத்து வந்து சாலையில் கிடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதையடுத்து கொலைக்கு மூளையாக இருந்த வாகன உரிமையாளர் செந்தில்குமார், ஓட்டுனர் பிரசன்னா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொடூர கொலைக்கு அமெரிக்காவில் இருந்தபடியே திட்டம் தீட்டிக் கொடுத்த ஜெயபாரதியின் கணவர் விஷ்ணுபிரகாஷ் சில லட்சங்களை முன் பணமாக அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுவதால் அது குறித்தும் விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணுபிரகாஷ் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.
விஷ்ணு பிரகாஷின் கொலை திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவித்து அவரை தமிழகம் வரவழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu