அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
X

வாஷிங்டன்னில் ராகுல் காந்தி.

Rahul Gandhi, artificial inteligence - அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடினார்.

Rahul Gandhi, artificial inteligence - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க சுற்றுப்பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தார்.

சான்பிரான்சிஸ்கோவில் நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி, வாஷிங்டன் மற்றும் நியூயார்க்கில் தனது பயணத்தை முடிக்கிறார். இந்த ஒருவார கால பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்தார். கடவுளுக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடியை அமர வைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவரே கடவுளுக்கு விளக்கி விடுவார் என்றும் கூறினார்.அவ்வாறு விளக்கும்போது கடவுளே குழப்பமாகி விடுவார் எனவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

Rahul Gandhi in US, Silicon Valley

வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்றையும், விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், ராணுவத்திற்கு போர் புரியும் முறையையும் விளக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார். பாஜக அரசு, மக்களை அச்சுறுத்துவதாகவும், விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறிய ராகுல் காந்தி, வன்மம், கோபம், வெறுப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே பாஜகவின் கூட்டத்தில் அமர முடியும் என்றார்.

Silicon Valley-based startup entrepreneurs

பாரத ஒற்றுமை யாத்திரையை நிறுத்தச் செய்ய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது என்றும் ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை எனவும் ராகுல்காந்தி தெரிவித்தார். நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், அதனைத் தீர்க்காமல் செங்கோல் வைப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

Congress leader Rahul Gandhi, trending news today in tamil

வேலையின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்பு பிரசாரம், கல்வியின்மை, கல்வி கட்டணம் உள்ளிட்டவையே இந்தியாவின் முக்கிய பிரச்னைகள் பாஜக இவை குறித்து ஆலோசனை நடத்தாது. அதன் காரணமாகவே செங்கோலை மையப்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் நேற்று வாஷிங்டனில் சிலிக்கான் பள்ளத்தாக்கு சார்ந்த ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். பிளக் அண்ட் ப்ளே ஆடிட்டோரியத்தில் நடந்த இந்த கலந்துரையாடலில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் அவருடன் இந்தியாவில் இருந்து பயணம் செய்து வரும் சில முக்கிய உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Today news in tamil

இவர்களுடன் ராகுல்காந்தி அமர்ந்து, செயற்கை நுண்ணறிவின் பல்வேறு அம்சங்கள், பெரிய தரவு, இயந்திர கற்றல் மற்றும் பொதுவாக மனித குலத்தின் மீதான அவற்றின் தாக்கங்கள் மற்றும் ஆளுகை, சமூக நல நடவடிக்கைகள் மற்றும் தவறான தகவல் போன்ற சிக்கல்கள் குறித்த நிபுணர்களின் குழு விவாதத்தில் ஈடுபட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!