புதினின் ரகசியசொகுசு ரயில். பிரமிக்க வைக்கும் வசதிகள்: ரஷ்யா கம்யூனிஸ்ட் நாடுதாங்க..
Putin's Personal Armoured Train
Putin's Personal Armoured Train-விளாடிமிர் புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு ரயிலில் பிரமிக்கும் அளவுக்கு வசதிகள் இருப்பது அண்மையில் வெளியான வலைதள செய்தி நிறுவனத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில் ரஷ்யாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்தவர் விளாடிமிர் புதின். வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே சவாலாக விளங்கும் ரஷ்யாவின் அதிபர். உளவுத்துறை அதிகாரியாக 16 ஆண்டுகள் பணிபுரிந்த, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுப்பதில் வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற உலகத் தலைவர்களில் ஒருவர்.
தன்னுடைய பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத விளாடிமிர் புதின் தன் அரண்மனை, தனிப்பட்ட அலுவலகம் என அனைத்தையுமே யாராலும் செல்ல முடியாத பகுதிகளாகவே வைத்திருக்க விரும்புவதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.
அண்மையில் ரஷ்ய வலைதள செய்தி அதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதிபர் புதினுக்கென பிரத்யேக ரயில் இருக்கும் தகவலை அந்த வலைதளம் வெளியிட்டுள்ளது.
அந்த பிரமாண்டமான பாதுகாப்பு ரகசிய ரயிலில் அதிபருக்கென தனித்தனியாக 22 பெட்டிகள் பிரிக்கப்பட்டு பலதரப்பட்ட உணவகங்கள், கார் நிறுத்துமிடம், அழகு நிலையங்கள், விளையாட்டு அறைகள், ஓய்வெடுக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிபருக்கான தனி அழகு நிலையம், மருத்துவ அறை, அனைத்து உபகரணங்களையும் உள்ளடக்கிய ஜிம் போன்ற வசதிகளும் உள்ளன.
ஹாமம் என சொல்லப்படும் 3.75 மில்லியன் மதிப்புடைய ஸ்பா வசதியுடன் கூடிய குளியலறையில் நவீன ஷவர்கள் பொருப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாசனை திரவியங்களால் ஆன ஃபோம் படுக்கையும் புதினுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இளமையாகவே தன்னை வைத்துக்கொள்ளும் இயந்திரங்களுடன் கூடிய அழகு சாதனங்கள், சுவாசப் பயிற்சிக்காக வெண்டிலேட்டர்கள், இதய துடிப்பு, உடல் வெப்பம் போன்றவற்றை பரிசோதிக்கும் கருவிகளும் ரயிலில் இடம்பெற்றுள்ளன. சுமார் 60 மில்லியன் பவுண்ட் செலவில் இந்த நவீன ரயில் அதிபர் புதினுக்காக தயாராகியுள்ளது.
அதேவேளை விமானங்கள் செல்லும் பாதையை ராடார்கள் மூலமாக கண்டுபிடிப்பதைப் போல இந்த ரயில் செல்லும் பாதையை கண்டுபிடித்துவிட முடியாது எனவும் கூறப்படுகின்றது.
விமானங்களைப் போலவே எளிதில் இந்த ரயிலை ட்ராக் செய்ய முடியாத காரணத்தால், உக்ரைனுடனான போரை தொடர்ந்து 2019 க்குப் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிபர் புதின் பெரும்பாலும் இந்த ரகசிய ரயிலையே பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. யெவ்ஜெனி ப்ரிகோஜினின் கூலிப்படையின் குறுகிய கால மற்றும் இறுதியில் கைவிடப்பட்ட கிளர்ச்சி புதினின் ஆட்சிக்கு மிகவும் வியத்தகு சவாலாக இருந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu