அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை

அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை
X

கம்போடியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதன் ஒரு பகுதியாக அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.இதேவேளை கம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வருகிற 20 ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் கம்போடியாவின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!