இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டிடம் நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டிடம்  நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி
X

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு நப்தாலி பென்னட்டை இன்று (04.04.2022) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைந்ததற்காக பென்னட்டுக்கு பிரதமர் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இஸ்ரேலில் அண்மையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் அவர் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

உக்ரைன் நிலவரம் உட்பட சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அரசியல் சம்பவங்கள் குறித்தும் இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர். பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். பென்னட்டை விரைவில் இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!