பிரதமர் நரேந்திரமோடி -5 தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்பு : வளர்ச்சிக்கு அடித்தளம்

பிரதமர் நரேந்திரமோடி -5 தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்பு : வளர்ச்சிக்கு அடித்தளம்
X

அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயணன் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.

5 உயர் அதிகாரிகளும் 5 முக்கிய துறைகளை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சார்ந்தவர்களான அடோப்பின் சிஇஓ சாந்தனு நாராயண் மற்றும் ஜெனரல் ஆடோமிக்ஸ் நிறுவனத்தின் விவேக் லால், உள்ளிட்ட 5 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயணை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மருடன் பிரதமர் மோடி சந்திப்பின் போது, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் மற்றும் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 450 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை எட்டுவதற்கான இலக்கு குறித்து பேசினார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் பிரத்தியேக மெல்லிய சுருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிப்பு வசதிகளை நிறுவுவது குறித்தும் சர்வதேச விநியோக சங்கிலிகளில் இந்தியாவை இணைப்பது குறித்தும் ஆலோசனை செய்தனர்.

குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்ற போது,

இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் மின்னணு துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சந்திப்பின் போது இருவரும் விவாதித்தனர். மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இந்திய செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் விவாதித்தனர்.

உள்ளூர் புதுமைகள் சூழலியலை இந்தியாவில் கட்டமைப்பதற்கான உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), ஃபுல்லெர்டன் இந்தியா கிரடிட் கம்பெனி லிமிடெட்டின் பங்குகளை சுமிடோமோ மிட்சுய் பினான்சியல் குரூப் இன்க் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டியியல் சட்டம், 2002-ன் 31(1)- பிரிவின் படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

போட்டியியல் சட்டம், 2002-இன் 5 (ஏ) பிரிவின் கீழ் ஃபுல்லெர்டன் இந்தியா கிரடிட் கம்பெனி லிமிடெட்டின் பங்குகளை சுமிடோமோ மிட்சுய் பினான்சியல் குரூப் இன்க் வாங்குகிறது.

சுமிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்ப்பரேஷன் மற்றும் இதர நிறுவனங்களின் தாய் நிறுவனமாக சுமிடோமோ மிட்சுய் பினான்சியல் குரூப் இன்க் உள்ளது. பல்வேறு நிதி சேவைகளை இது வழங்குகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்து கொண்டுள்ள வங்கி சாரா நிதி நிறுவனமாக ஃபுல்லெர்டன் இந்தியா கிரடிட் கம்பெனி லிமிடெட் இயங்கி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த 5 தலைமை செயல் அதிகாரிகளில் இருவர் இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள் என்பது முக்கியமானது.

ஒருவர் அடோப்பின் சிஇஓ சாந்தனு நாராயண் மற்றும் ஜெனரல் ஆடோமிக்ஸ் நிறுவனத்தின் விவேக் லால், குவால்காமின் கிறிஸ்டியானோ இ அமோன், பர்ஸ்ட் சோலாரின் மார்க் விட்மர், பிளாக்ஸ்டோன் தலைவர் ஸ்டீபன் ஏ ஸ்வார்ஸ்மேன் ஆகியோருடன் சந்திப்பு நடைபெற்றது.

டிஜிட்டல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் இந்த ஐந்து உயர் அதிகாரிகளும் ஐந்து முக்கிய துறைகளை சேர்ந்தவர்கள் ஆவார். எனவே இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில் அடோப்பின் சிஈஓ சாந்தனு நாராயண் உடனான சந்திப்பானது ,ஐடி மற்றும் டிஜிட்டல் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாகிறது.

இந்தியா தனது இராணுவ பலத்தினை மேம்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து ட்ரோன்களை வாங்கி வரும் போது, ட்ரோன் உற்பத்தியாளர் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் விவேக்லால் சந்திப்பும் மிக முக்கியமானது.

அணுசக்தி இராணுவ ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகவும், உலகின் அதிநவீன இராணுவ ட்ரோன்களின் முன்னணி உற்பத்தியாளராகவும் விளங்கும் இவர்களது சந்திப்பு முக்கியமானது. இதன் மூலம் மேற்கோண்டு அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்பு உறவில் மேலும் பலப்படும் சூழல் உருவாகும்.

சோலார் பற்றிய பேச்சு வார்த்தை இந்தியாவில் தற்போது சோலார் தேவையை பூர்த்திய செய்ய, பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் மார்க் விட்மருடனான சந்திப்பும் முக்கியமாது.

பிளாக்ஸ்டோன் அதிகாரி உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்ஸ்டோனின் தலைமை அதிகாரியான ஸ்டீபனுடனான சந்திப்பால் இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!