அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்

அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
X

பைல் படம்.

சமீபத்தில் போப் பிரான்சிஸ் 3 நாள் பயணமாக தெற்கு சூடான் நாட்டுக்கு சென்றிந்தார்.

தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் போப் பிரான்சிஸ் தனது அடுத்த பயண திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது வரும் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்கு செல்லவிருப்பதாக கூறினார். அதற்கு பின்பு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறினார். பின்பு முதன்முறையாக மங்கோலியா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறிய போப் பிரான்சிஸ் 2024-ம் ஆண்டு இந்தியா வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஐரோப்பாவில் சிறிய நாடுகளாக தேர்ந்தெடுத்து சென்று வருவதாகவும் அதன் மூலம் அறியப்படாத ஐரோப்பாவை அறிந்து கொண்டு வருவதாகவும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் இந்தியாவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை தொடர்ந்து போப் பிரான்சிஸ் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக இந்திய பிரதமர்களில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமே அப்போதைய போப்-களை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!