படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர்: யுனெஸ்கோ தேர்வு

படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர்: யுனெஸ்கோ தேர்வு
X
யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர் தேர்வு, பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி.

கைவினை மற்றும் நாட்டுப்புற கலைக்கு சிறப்புக் குறிப்புடன், ஸ்ரீநகர், யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இணைந்திருப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் தமது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

"மிகவும் அழகிய நகரான ஸ்ரீநகர், தன் கைவினை மற்றும் நாட்டுப்புற கலைக்கு சிறப்புக் குறிப்புடன் யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீநகரின் சிறப்பான கலாச்சார நெறிமுறைகளுக்கு இது பொருத்தமான அங்கீகாரமாகும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகள்", என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!