வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்து: பைஸர் அறிமுகம்

வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்து: பைஸர் அறிமுகம்
X
வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான கொரோனா தடுப்பு மருந்துகளை பைஸர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இது குறித்து பைஸர் நிறுவன இயக்குனர் ஆல்பர்ட் போர்லா கூறும்போது, "கொரோனாவுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினோம். ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து. வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் முக்கியமானது நீங்கள் மருத்துவமனை செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தே மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

அனைத்தும் நல்லபடியாக முடிந்தால், இந்த ஆண்டு இறுதியில் வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்துகளை எதிர்பார்க்கலாம்" என்றார்.

கொரோனா வைரஸுக்கு எதிராக தற்போது பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஒரே வைரஸ் தடுப்பு ரெம்டெசிவிர் ஆகும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) கடந்த ஆண்டு மே மாதம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர் அக்டோபரில் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்தது.

உலகெங்கிலும் ஊசி வகையிலான தடுப்பு மருந்துகளே தற்போது நிலையில் பயன்பாட்டில் உள்ளது. பைஸர் நிறுவனம் வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தை அறிமுகப்படுத்தினால் ஏராளமான மக்களை கொரோனா தடுப்பு மருந்து சென்றடைய முடியும்.


Tags

Next Story