பாகிஸ்தான் தேர்தலில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்ட அதிகாரி ராஜினாமா

பாகிஸ்தான் தேர்தலில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்ட அதிகாரி ராஜினாமா
X

ராஜினாமா செய்த பாகிஸ்தான் தேர்தல் அலுவலர் 

இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. தேர்தல் முடிவு மாற்றப்பட்டதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இம்ரான் கான் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தவறு நடந்துள்ளன. அதற்கு பொறுப்பேற்று தனது பதவியை அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷனரான லியாகத் அலி சத்தா, இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பத்திரிகையாளர்களின் பேசினார். அப்போது "தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர்.

நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக இதில் ஈடுபட்டார்கள்.

இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட லியாகத் அலி சத்தா தனது அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டின் முதுகில் குத்துவது தன்னை தூங்க விடாது என்றார். நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்கான எந்த தவறான செயல்களில் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடையே வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இம்ரான் கானின் தெஹ்ரிக்-ரீ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றதாகவும், முடிவுகள் மாற்றப்பட்டதாகவும், அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

அதன்பின் சனிக்கிழமை இறுதியாக அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் பொதுத்தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என அறிவித்தார்.

இதற்கிடையே நவாஸ் ஷெரீப் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என போட்டியாக அறிவித்தார். அத்துடன் பிலாவல் பூட்டோ உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஷெரீப் முடிவு செய்தார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு