கிரேக்ககடவுள் ஆர்ட்டெமிஸ்கோயில் தீவைத்து கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது
கிரேக்க கடவுள் ஆர்ட்டெமிஸ்கோயில்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது
கிமு 356 – இதே நாளில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
பண்டைக்கால ஏழு உலக அதிசயங்கள்- அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், ஆர்ட்டெமிஸ் கோயில், ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை, கிசாவின் பெரிய பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், மௌசோல்லொசின் கல்லறை, ரோடொஸின் கொலோசஸ் ஆகும்.
தண்டனையின் கிரேக்க தெய்வமான ஆர்ட்டெமிஸ்க்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் இரண்டு முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுள்ளது. ஒரு சுற்றுலாப்பயணியின் கூற்றுப்படி, அவர் பண்டைய உலகின் ஏழு அதிசயங்களை பார்வையிட்டுள்ளார். ஆனால் ஆர்ட்டெமிஸ் கோயிலுக்கு முன்னால் மீதமுள்ள ஆறு அதிசயங்கள் சாதாரண படைப்புகள் என்று கூறப்படுகிறதாம்.
புராணத்தின் படி, மன்னர் அலெக்சாண்டர் பிறந்த நாளில் ஹீரோஸ்டர்ஸ் என்ற மனிதர் இந்த கோயிலுக்கு தீ வைத்தார். அதற்கு காரணம் அவரது பெயர் வரலாற்றில் இருந்து மறைந்து விடக்கூடாது என்ற விசித்திரமான நோக்கத்தினாலாகும். ஆனால் அதனை தொடர்ந்தும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகிவிட்டது. புராணக்கதை என்னவென்றால், ஆர்ட்டெமிஸ் தெய்வம் அலெக்சாண்டர் மன்னனின் பிறப்புக்காக சென்றிருந்தது என்பதனால், ஆர்ட்டெமிஸ் தெய்வ கோயிலைக் காப்பாற்ற முடியவில்லை.கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று.
ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அஸ்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளது. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கருதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகனால் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu