தாக்கப்பட்டது ஈரானிய கப்பல் அதிகாரப்பூர்வ தகவல்

ஈரான் சாவிஸ் என்ற கப்பல் கடந்த சில ஆண்டுகளாக செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.எரிபிரியா கடற்கரையில் வைத்து இந்த கப்பல் தாக்கப்பட்டதாகவும் ஈரானின் புரட்சிகர காவலர்களுடன் இணைந்ததாகவும் பெயரிடப்படாத ஆதாரங்களை அல் அரேபியா டிவி மேற்கோளிட்டுள்ளது,

செங்கடலில் உள்ள ஈரானிய கப்பலான சாவிஸ் தாக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம் செவ்வாயன்று அறிக்கை அளித்தது.

பிப்ரவரி பிற்பகுதியில் இருந்து இஸ்ரேலிய மற்றும் ஈரானுக்கு சொந்தமான கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் இது சமீபத்தியது என தெரியவந்துள்ளது.செவ்வாயன்று ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!